ஐரோப்பா செல்ல காத்திருந்த இளைஞன் மரணம்
ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல காத்திருந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கேகாலை, தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெதிகம பொலிஸார் தெரிவித்தனர்.
தெதிகம பிரதேசத்தை சேர்ந்த அஷான் பிரபோத என்ற 27 வயதுடைய திருமணமாகாத இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ருமேனியாவில் வேலை
அடுத்த மூன்று வாரங்களுக்குள் ருமேனியாவில் வேலைக்குச் செல்லத் தயாராக இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல், உயிரிழந்த இளைஞர் உட்பட ஒன்பது பேர் கொண்ட குழுவினர் ஒரு இளைஞனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர்.
சடலம் கண்டுபிடிப்பு
அங்கு நீராடச் சென்ற போது அஷான் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை காணாமல் போன பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
