புத்தளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை (Photos)
புத்தளம் - கல்லடி நெழும்வெவ பகுதியில் நேற்றைய தினம் (11.04.2023) இரவு
ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிலாபம் ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கல்லடி பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி சென்று, சடலத்தைப் பார்வையிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் புத்தளம் நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
குறித்த சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸாரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
