தலவாக்கலை லோகி தோட்ட குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்ட குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
உடப்புசலாவ பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் தலவாக்கலை நகருக்கு வந்திருந்த இளைஞன் ஒருவரே 04.08.2025 அன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தனது நண்பருடன் குளிப்பதற்காக அங்கு சென்ற சமயம் குளத்தில் தவறி விழுந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
தற்போது சடலம் மீட்கப்பட்டு கரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவானின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் லிந்துலை பெல்கிரேவியா தோட்டப்பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்றதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர் 20 வயதுடைய அருமைவாசகம் கமலராஜா என பொலிஷார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - கிஷாந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
