மட்டக்களப்பில் குடும்ப தகராறில் ஒருவர் கோடரியால் தாக்கி கொலை
மட்டக்களப்பு (Batticaloa) - வடமுனையில் குடும்ப தகராறு ஒன்றில் நபர் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வடமுனை - ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு 11.00 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவர், மனைவியின் சகோதரனுடன் மதுபோதை அருந்திவிட்டு தகராறு செய்த நிலையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது.
இதனை அடுத்து சகோதரியின் கணவர் மீது கோடரி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
