மனைவியை கொலை செய்த கணவன் - உயிருக்கு ஆபத்தான நிலையில் அத்தை
கம்பஹாவில் மனைவியை கொலை செய்த கணவன், தன்னுயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுனொறுவ வண்ணமடுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரிய ஆயுதம்
மனைவியைக் கொன்ற கணவன், தனது அத்தையையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு, அவரும் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துள்ளார்.
லபுனொறுவ வண்ணமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சந்தேகநபரின் வீட்டை அண்டியுள்ள வீடொன்றின் முற்றத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த அத்தை உடனடியாக சிகிச்சைக்காக பிரிமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சை
ஆபத்தான நிலையில் உள்ள பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.





ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam
