காதலியைக் கொன்று விட்டுத் தன்னுயிரையும் மாய்த்துக் கொண்ட இளைஞன்
காதலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக அவரைக் கொலை செய்து விட்டு இளைஞனொருவர் தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை அருகே பதியத்தலாவை பிரதேசத்தில் இன்று (23) அதிகாலை குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொலிசார் விசாரணை
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் 23 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam