யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
யாழ் - உடுத்துறை கடற்பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா தண்ட பணம் விதித்துள்ளது.
குறித்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்றைய தினம் (12-03-2024) கிளிநொச்சி மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று இலட்சம் தண்டப்பணம்
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுத்துறை பகுதியில் கடற்றொழில் படகு ஒன்றில் வைத்து 11 கிலோ 95 கிராம் கஞ்சாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இதற்கமைய, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருவருக்கும் தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் மூன்று இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுளள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
