லிந்துலையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி
லிந்துலை, லோகி தோட்டத்தில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடப்புசல்லாவ எனிக் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான அருமைவாசகம் கமலராஜா என்பவரே உயிரிழந்தவராவாரென அடையாளம் காணப்பட்டுள்ளது.
குளிக்க சென்ற இளைஞன்
குறித்த இளைஞன் உடப்புசல்லாவ பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதியில் உள்ள ஒரு கடையில் தொழில் புரிந்து வந்தவர் எனவும், நேற்று லிந்துலை லோகி தோட்டத்தில் உள்ள நான்கு நண்பர்களுடன் குளிக்க வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
சடலம் மீட்பு
இதனையடுத்து நேற்று மாலை லிந்துலை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை குளத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
