யாழில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் பலி!
யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இன்றையதினம்(25.3.2026) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நாவலர் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 18ஆம் திகதி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து பெண் மீட்கப்பட்ட சம்பவம்: வேலையின்றி சொத்து சேர்த்துள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள்..!
உயிரிழப்பு
இதன்போது வலதுபக்கம் திரும்புவதற்காக மத்திய கோட்டை நோக்கி சென்றவேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam