கொழும்பில் மின்கம்பத்தில் ஏறிய நபர்! இறங்க வைப்பதில் கடும் சிரமப்பட்ட பொலிசார்
கொழும்பு, பொரளையின் பிரதான வீதியொன்றில் மின்கம்பத்தில் ஏறி எதிர்ப்புத் தெரிவித்த நபரொருவரின் செயற்பாடு காரணமாக பொலிசார் கடும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர்.
குறித்த நபர் மின்கம்பத்தில் ஏறி எதிர்ப்புத் தெரிவித்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை.
ஆயினும் குறித்த நபர் தனக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின்கம்பத்தில் ஏறி நின்றிருந்தார்.
போக்குவரத்து நெரிசல்
பிரதான வீதியால் சென்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் திரண்டு குறித்த நபரை வேடிக்கை பார்க்க முற்பட்டதால் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நபரை மின்கம்பத்தில் இருந்து கீழே இறக்குவதற்காக கடும்பிரயத்தனம் மேற்கொண்ட பொலிசார் கடைசியில் மின் தூக்கியொன்றை வரவழைத்து அவரை இறக்கிக் கொள்வதில் வெற்றி கண்டுள்ளனர்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri