ஆபத்தான வெடிபொருட்களுடன் சிக்கிய லொறி - பொலிஸார் அதிரடி நடவடிக்கை
ஹபரண - திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் லொறியின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பிரதான வீதியில் உள்ள ஹத்ரெஸ் கொட்டுவ பகுதியில் அதிகாரிகளால் வாகனம் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
சாரதியின் இருக்கைக்கு அருகிலுள்ள டேஷ்போர்டுக்கு அடியில் C4 எனப்படும் சக்திவாய்ந்த வெடிபொருள் அடங்கிய பொதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
[RPMFY1Q ]
வெடிபொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் 156.07 கிராம் எடையுள்ளதாக இருந்ததுடன், லொறியும், பறிமுதல் செய்யப்பட்டது.

C4 மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருள் எனவும் அதனை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளமையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கந்தளாய் பகுதியிலிருந்து தெற்கு பகுதிக்கு வெடிபொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, வெடிபொருட்களை கொண்டு சென்றதன் காரணத்தை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri