பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ். பருத்தித்துறை கடல் வழியாகக் கஞ்சா கடத்திய ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை கடலில் சந்தேகத்திற்கிடமான படகொன்று வருவதை அவதானித்த கடற்படையினர் அந்தப் படகினை சுற்றிவளைத்தனர்.
அந்தப் படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 150 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடற்படையினர் மேற்கொண்ட பின்னர், குறித்த சந்தேக நபரையும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினையும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வெளிநாட்டு பெண்ணை 11 ஆண்டுகளாக காதலித்த தமிழர்! உறுதியாக இருந்த ஜோடி... இறுதியில் சுபம் News Lankasri

உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம்- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri
