விகாரமஹாதேவி பூங்காவுக்கு கூரிய ஆயுதங்களுடன் சென்ற ஒருவர் கைது
விகாரமஹாதேவி பூங்காவில் பிக்குமாரின் சத்தியாக்கிரகம் நடைபெறும் இடத்துக்கு கூரிய கத்திகளுடன் வருகை தந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவிக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் பிக்குமார் குழுவொன்று சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொண்டுள்ளது.
பொலிசார் விசாரணை
கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவில் குறித்த சத்தியாக்கிரக பூமிக்கு இன்று மாலை இரண்டு கூரிய கத்திகளுடன் நபரொருவர் வருகை தந்துள்ளார்.

அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட தேரர்கள் குறித்த நபரைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரைக் கைதுசெய்த குருந்துவத்தை பொலிசார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.