நுவரெலியாவில் சட்டவிரோத மதுபானம் தயாரித்தவர் கைது
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் சாரதி அலுவல் இல்லத்தில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற சாரதி ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத மது உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(19.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர், அலுவல் இல்லத்தின் சமையலறையில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து நண்பர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.
கைது
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது 50,000 மில்லிலிட்டர் கோடா மற்றும் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

65 வயதான சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.