தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிதிநிதித்துவம் செய்யும் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்படாது
எவ்வாறெனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி நாடாளுமன்றை கலைக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரஷ்ய எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள் : முன்னாள் படைவீரர் பரபரப்பு தகவல்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
