ரணில் - மகிந்தவால் தனித்து விடப்பட்ட மைத்திரி.. நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து பகிரங்கம்
தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நான்கு நபர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளில் தான் கையெழுத்திட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும், தனது இந்தத் தீர்மானத்திற்கு அன்றைய பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தான் கையெழுத்திட்டதற்கு மறுநாளே, அவர்கள் நாடாளுமன்றத்தில் தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக அவர் குறப்பிட்டார்.
மரண தண்டனை
இவ்வாறானதொரு நடவடிக்கை இலங்கையை மனித உரிமைகளை மீறும் நாடாக முத்திரை குத்த வழிவகுக்கும் என்றும், வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வருவதைத் தடுக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்ததாக அவர் விளக்கினார்.

இச்சம்பவம் குறித்து மேலும் விவரித்த அவர், "அக்காலப்பகுதியில் நீதி அமைச்சராகப் பணியாற்றிய தலதா அத்துகோரளவும் இது தொடர்பாகத் என்னிடம் கேள்வி எழுப்பினார்.
இரு தரப்பினராலும் எழுப்பப்பட்ட எதிர்ப்புகளைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் ஆராய்ந்ததேன், பின்னர், அந்த வர்த்தமானியில் (Gazette) குறிப்பிடப்பட்டுள்ள திகதியில் அந்த நான்கு பேரையும் தூக்கிலிட்டு, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் என பணித்தேன்.
மத்திய கிழக்கு போர் இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்! மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
19ஆவது திருத்தம்
இருப்பினும், எனக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களின் பின்னர் குறித்த மரண தண்டனைகளை நிறைவேற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

அந்தச் செயற்பாட்டிற்குப் பின்னால் இருந்த தரப்பினர் யார் என்பதைப் பொதுமக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதேவேளை, ஊழல் மற்றும் மோசடிகளற்ற ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்ப நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது அவசியம் என நான் நம்பியதாலேயே, எனது ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினேன்.
ஆனால், அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தியமை இறுதியில் எனக்கே பாதகமான சூழ்நிலையை உருவாக்கியது, ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரின் முழுமையான ஆதரவுமின்றிப் பல ஆண்டுகள் தனித்து நிற்கும் ஒரு ஜனாதிபதியாக நாட்டை ஆள வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri