மைத்திரியின் வீடு ஜனாதிபதி ரணிலுக்கு வழங்க நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள வீட்டை புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை அடுத்து அவர் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார்.
போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை என்பன சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஜனாதிபதியோ பிரதமரோ அங்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசித்து வந்த வீட்டை ஜனாதிபதிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதி அந்த வீட்டில் இருந்து அகற்றப்பட்டார்

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
