முன்னாள் சபாநாயகரின் 9 மாத எரிபொருள் செலவு: வெளியான தகவல்
இலங்கையின் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கடந்த 2024 ஜனவரி 1, முதல் செப்டெம்பர் 24 வரை ஒன்பது மாதங்களுக்குள் 33 மில்லியன் ருபாய் மதிப்புள்ள எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார்.
இது மாதத்திற்கு 4 மில்லியன் ரூபாயாகும் என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எனினும் தற்போதைய சபாநாயகர் ஜனவரி மாதத்திற்கு எரிபொருளுக்காக 218,000 ரூபாயை மட்டுமே செலவிட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
மாத செலவு
முன்னாள் சபாநாயகர் ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், ஒன்பது மாதங்களுக்கான அவரது எரிபொருள் செலவு 33 மில்லியன் ரூபாய்கள் என்றும், துணை சபாநாயகர் ஆறு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் 13.5 மில்லியன் ரூபாயை, அவர் செலவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.
அதேவேளை, முன்னாள் குழுக்களின் துணைத் தலைவர்கள் நான்கு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும், 7.2 மில்லியன் ரூபாயை எரிபொருளுக்காக செலவிட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய துணை சபாநாயகர் ஜனவரி மாதத்திற்கு எரிபொருளுக்காக ரூ. 23,000 மட்டுமே பயன்படுத்தியுள்ளார் என்றும், குழுக்களின் துணைத் தலைவர்கள் ஜனவரி மாதத்திற்கு எரிபொருளுக்காக 81,000 ரூபாய்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதற்கிடையில் சபாநாயகரின் பங்களாவைப் பராமரிக்க 70 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும் Independence அவர் கூறினார்.
முன்னாள் சபாநாயகரின் பங்களாவின் உணவுச் செலவு 2023 இல் 2.6 மில்லியனாகவும், 2024 இல் 3.6 மில்லியன் ரூபாய்களாகவும் இருந்தது என்றும் அவர் கூறினார். தற்போதைய சபாநாயகரின் உணவுச் செலவு ஜனவரி மாதத்திற்கான 33,000 ரூபாய் மட்டுமே என்று அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |