மிகவும் மனவருத்தத்துடன் இத்தாலி சென்ற மஹிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை தனது அதிகாரிகளுடன் இத்தாலி நோக்கி பயணித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே பிரதமர் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பிரதமர் மிகவும் மனவருத்தமடைந்த நிலையிலேயே இத்தாலிக்கு பயணம் மேற்கொள்வதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்மையில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வெளியிட்ட கருத்துக்களினால் பிரதமர் மனவருத்தமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கர்தினாலுக்கு யாரோ கூறியதனை, ஊடகம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். தன்னை தொடர்பு கொண்டிருந்தால உண்மை எது? பொய் எதுவென அறிந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் நேரிடியாக கர்தினால் பேசியிருக்கலாம். அதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உண்மை தெரியாமலேயே பேசியுள்ளார். எனினும் அவ்வாறு பேசாமல் ஊடகத்திடம் விமர்சித்திருப்பது வருத்தமளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினால் மிகவும் வருத்தமடைந்த நிலையிலே பிரதமர் இத்தாலிக்கு சென்றுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri