மங்களவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பிரதமர் மஹிந்த!
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது வருத்தத்தினை வௌயிட்டுள்ளார்.
சிரேஸ்ட தலைவர் ஒருவரை இலங்கை இழந்துவிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச டுவிட்டர் பக்கத்தில் கவவை வெளியிட்டுள்ளார்.
மங்கள சமரவீர என்பவர் இலங்கை நாட்டு மக்களால் நேசிக்கப்பட்டவர். இவரது மறைவுச் செய்தியை கேட்டதன் பின் தாம் அதிர்ச்சியடைந்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை நாட்டிற்காக அவர் செய்த பணிளுக்காக தாம் நன்றிகூற கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
I am deeply saddened to hear of the untimely passing of my friend & colleague Mangala Samaraweera. Today we have lost a great leader, a man who loved this nation. I thank him for his service to #lka. My condolences to his family. May he attain the supreme bliss of Nibbhana.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 24, 2021