நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகும் மகிந்தவின் பாதுகாப்பு விவகாரம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின்(Mahinda Rajapaksa) பாதுகாப்பு நீக்க விவகாரத்தினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ரவீந்திர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று (25.12.2024) கலந்து கொண்டபோதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் படுகாப்பை பரிசீலித்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவை நீக்கப்பட்டாலும் பொருளாதார காரணங்களுக்காக முப்படையினரை நீக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரவீந்திர ஜயசிங்க கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
தான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியிட மகிந்த ராசபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கூறிய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இது மக்களை தவறாக வழிநடத்தும் நடவடிக்கை என்றும் ரவீந்திர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |