17 வருடங்களுக்கு பின் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் கட்டவிழ்க்கப்படும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரம்..!
தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று(12.05.2026) கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபிக்கு முன்னாள் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் வாரம்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர் இன்று மகிந்த ராஜபக்ச குடும்பம் 17 வருடங்களுக்கு பின்னர், அதே மாதத்தில் கண்ணீர் விட வைக்கிறது.
அவ்வாறே தமிழ் மக்கள் மீது இன அழிப்பை செய்தவர்களை கண்டுபிடித்து சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது தமிழர்களை பொறுத்தமட்டில் இந்த மாதம் கண்ணீர் சுமந்த மாதம் தமிழர்களுக்கு அநீதி விளைவித்ததில் மகிந்த ராஜபக்சவும் ஒருவர், அதேபோன்று தமிழர்களின் இன அழிப்பில் பங்கு கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு தமிழர்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரைக்கும் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த விசாரணை முடிவில், தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், தமிழர்களை அவர் செய்தார் இவர் செய்தார் என குற்றம் சாட்டி தமிழ் மக்கள் மீது செய்த மிக மோசமான அநியாயங்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.
ராஜபக்சர்கள் கைது செய்யப்பட வேண்டும்..
அதே போன்று, தமிழ் மக்களை கொல்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள், விமானங்களை கொள்வனவு செய்வதற்காக பொய்யான கணக்குகள் காட்டப்பட்டு, பெரும் அளவிலான பணங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இந்த ஊழல் மோசடிகளை பலர் சந்திக்கும் நிலைப்பாடு காணப்படுகின்றது.

ஆகவே இந்த மாதத்தில் தமிழர்கள் மீது மிக மோசமான இன அழிப்பை செய்தவர்களை கைது செய்வதையிட்டு தமிழர்கள் நிம்மதி அடைகின்றனர்.
அதேவேளை, இந்த இனத்தின் மீது அநியாயம் செய்தவர்களை கைது செய்து தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க இந்த நாட்டின் தலைவர் முன்வர வேண்டும் என்றார்.
குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! சிக்கிய போலி ஆவணங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam