நீண்ட காலத்தின் பின்னர் சந்தித்துக் கொண்ட மஹிந்த - ரணில்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் பென்தோட்டை பிரதேசத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஊடகமொன்று ரணிலிடம் வினவியுள்ளது. அதற்கு பதிலளித்த ரணில், இது நட்புறவான சந்திப்பு ஒன்று. நீண்ட காலமாக நாம் சந்திப்போம் என அவர் கேட்டிருந்தார்.
ஏனையவர்களுக்கு பிரதமரை நாடாளுமன்றத்தில் சந்திக்க முடியும். அவர் நிதி அமைச்சர் என்பதனால் இந்த சந்திப்பில் பொருளாதாரம் குறித்த தான் பேசினோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் நாடாளுமன்ற பதவிக்காக ரயில் விக்ரமசிங்கவை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த காலப்பகுதியினுள் இவ்வாறான திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பது குறித்து பல்வேறு தரப்பினால் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் விசேட அரசியல் புரட்சி ஒன்றிற்கான வாய்ப்பாக இந்த சந்திப்பு இருக்கலாம் என பிரபல அரசியல் பிரபலங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.



