அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் மகிந்த முடிவை எடுக்க வேண்டும்-பிரசன்ன ரணதுங்க
தனது தேர்தல் தொகுதியில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புக்கு அமைய நிபந்தனையின்றி இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என 99 வீதமானோர் தெரிவித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதியுடன் கூட்டணி அமைக்கப்படலாம்
[0RZFRH[
நாட்டில் நிலவும் அரசியல் நிலைமையின் அடிப்படையில் எதிர்காலத்தில் எந்த அணியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. இதனடிப்படையில், எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கப்படலாம்.
அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதை மகிந்தவே தீர்மானிக்க வேண்டும்

அதேவேளை தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதா இல்லையா அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதா என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானிக்க வேண்டிய ஒன்று.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் ஏற்றுக்கொள்கிறேன்.
பொதுஜன பெரமுன மாவட்ட மட்டத்தில் நடத்தும் பொதுக்கூட்டம் இன்னும் தனது தொகுதியில் ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்த கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ய மாட்டேன் எனவும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.