தீவிரமடையும் மோதல் நிலைமை - கோட்டாபயவிடம் நேரடியாக களமிறங்கும் மஹிந்த
அரசாங்கத்துடன் இணைந்துள்ள முன்னணி கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலின் பின்னரே பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரகசிய கலந்துரையாடலில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர ஆகியோரும் இந்த வாரம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இனியும் இந்த அரசாங்கத்தில் இருக்க முடியாது என்பதால் தான் இராஜினாமா செய்ய வேண்டும் என யூடியூப் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது ஒரு முட்டாள்தனமான அரசாங்கம் என டியூ குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவரது விமர்சனம் கடுமையான மற்றும் இரக்கமற்ற விமர்சனமாக உள்ளதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலைமை மிகவும் மோசமாக உள்ளமையினால் பிரதமர், ஏனைய பிரதான கட்சி தலைவர்களுடன் அடுத்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து நேரடி கலந்துரையாடல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
