மகிந்தவை விட்டு பிரியும் முன்னர், புகைப்படம் எடுத்துக்கொண்ட 116 பணியாளர்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் இருந்து நீக்கப்பட்ட 116 பாதுகாப்புப் பணியாளர்களும், தமது வெளியேற்றத்துக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசாங்கம் மேற்கொண்ட மறுஆய்வுக்குப் பிறகு, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 116 பேர் நீக்கப்பட்டனர்.
மனிதவளத் துறைக்குப் பொறுப்பான துணை பொலிஸ் அதிபர், ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவுக்கு இந்த முடிவைத் தெரிவித்தார்.
பாதுகாப்புப் பணியாளர்கள்
இதனையடுத்தே தங்கள் கடமைகளை முடித்து வெளியேறுவதற்கு முன்னர், பாதுகாப்புப் பணியாளர்கள் முன்னாள் ஜனாதிபதியுடன் ஒரு சுமுகமான உரையாடலை நடத்தினர், மேலும் அவருடன் ஒரு குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொடுத்தனர்.
For years, you have stood by me like a shadow, protecting my life and the lives of my family members. Your sacrifices, loyalty, and service have meant more than words can ever express. I extend my heartfelt gratitude and deepest respect to all of you. pic.twitter.com/JLUgIRVERb
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) December 13, 2024
இந்தநிலையில் தமது எக்ஸ் பக்கத்தில் மகிந்த ராஜபக்ச, இந்த பிரிவு குறித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார் “பல ஆண்டுகளாக, நீங்கள் ஒரு நிழலைப் போல என்னுடன் நின்று, என் உயிரையும் என் குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் பாதுகாத்தீர்கள்.
உங்கள் தியாகங்கள், விசுவாசம் மற்றும் சேவை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் ஆழ்ந்த மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அந்த பதிவில் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பில், ராஜபக்சவின் உயிருக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று, அந்தக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |