ஆட்டநாயகன் பரிசை நன்கொடையாக வழங்கிய மஹீஸ் தீக்ஷன
லங்கா பிரிமியர் லீக் போட்டியில் வென்ற பரிசுத்தொகையை புற்று நோய் நிதியத்திற்கு இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் மஹீஸ் தீக்ஷன நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இலங்கையில் தற்பொழுது நடைபெற்று வரும் லங்கா பிரிமியர் லீக் போட்டித்தொடரின் போட்டியொன்றில் தீக்ஷன ஆட்ட நாயகனாக தெரிவாகியிருந்தார்.
கால் மார்வல் அணியின் சார்பில் விளையாடி வரும் தீக்ஷன, தம்புள்ள அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானமைக்காக தீக்ஷனவிற்கு 1500 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்பட்டது.
இந்த பரிசுத் தொகையை தாம் இந்திரா புற்று நோய் நிதியத்திற்கு வழங்குவதாக தீக்ஷன அறிவித்துள்ளார்.
மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோய் சிகிச்சைக்காகவும் இந்த நிதியம் நிதி திரட்டி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam