நாடாளுமன்றத்தில் உள்ள சட்டமியற்றுபவர்கள் குறித்து மகாநாயக்க தேரர்கள் அதிருப்தி - செய்திகளின் தொகுப்பு
சர்வகட்சி பொது இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குவதற்கு முயற்சி எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்து சட்டமியற்றுபவர்களுக்கும் சியாம், அமரபுர மற்றும் ராமன்ன நிகாயா பிரிவுகளின் மகாநாயக்க தேரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இரண்டு பக்க அறிக்கையொன்றில், இலங்கை மக்களைப் பாதித்துள்ள சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளில் தலையிட்டுத் தீர்வு காண நாடாளுமன்றத்தில் உள்ள சட்டமியற்றுபவர்கள் தவறியமை குறித்து மகாநாயக்க தேரர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மக்கள் நெருக்கடியில் உள்ள நேரத்தில், நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் கட்சிகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பொது நிதியை வீணடித்து வருவதாகவும், எனவே மக்கள் ஆணையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நம்பகத்தன்மையை அவர்கள் கொண்டிருக்கிறார்களா என்பது கவலைக்குரியது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam