மேக்புக் மற்றும் ஐபோன் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
குறைந்த விலையிலான மேக்புக் மற்றும் ஐபோன் மொடல்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது தயாரிப்புகளை சாமானிய மக்களும் வாங்குவதற்காக இந்த திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கான விசேட அறிமுக நிகழ்வு லண்டன், நியூயோர்க் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
புதிய தயாரிப்புகள்
மாணவர்கள் மற்றும் சாதாரண பயனர்களை இலக்கு வைத்து, 55,000 ரூபா முதல் 72,500 ரூபா வரையிலான விலையில் மேக்புக் ப்ரோ மற்றும் ஏர் (MacBook Pro & Air) மொடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

இந்தப் புதிய தயாரிப்புகள் 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சந்தைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |