யாழில் இடம்பெற்ற மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு
யாழ் தீவகம் வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூவியில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்கள் இன்று காலை நினைவேந்தப்பட்டனர்.
மாவீரர் வாரத்தின் நான்காம் நாளாகிய இன்று யாழ் தீவகம் வங்களாவடி சந்தையில் அமைந்துள்ள நினைவுத் தூவியில் மாவீரர்கள் நினைவு கூறப்பட்டனர் .
நிகழ்வில் மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது இந் நிகழ்வில் மாவிரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் வேலணை பகுதி வர்த்தகர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்


தமிழ் தேசிய செயற்பாட்டாளர்
மேலும், தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலனை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் இன்று மதிப்பளிக்கப்பட்டனர்.
மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் வேலனை துறையூர் சந்தியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வேலணை ஐயானார் சனசமூக நிலைய மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணியப்பட்டு கண்ணீர் மல்க மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களை கௌரவிக்கும் முகமாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன நிகழ்வில் யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் ,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 

 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        