சிவ சிதம்பரத்தின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சிவ சிதம்பரத்தின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலை முன்பாக இன்று(5.6.2026) காலை 08.00 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி சபாநாயகருமான சிவ சிதம்பரத்தின் அரசியல் மற்றும் சமூக சேவைகளை நினைவுகூரும் வகையில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
காத்தான்குடி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்ற முயற்சித்தால் எழுந்த சர்ச்சை
அஞ்சலி
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தலைமையிலான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

அமரர் சிவ சிதம்பரம் தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய தலைவராக நினைவு கூரப்பட்டார். அவரது சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கலந்துகொண்டவர்கள் அஞ்சலி உரைகளில் வலியுறுத்தினர்.



நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை