கட்டுநாயக்க - மாகும்புற வரையான சொகுசுப் பேருந்து சேவை மீள ஆரம்பம்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் மாகும்புற பஸ்நிலையத்துக்கும் இடையிலான சொகுசுப் பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வாடகை வண்டி சாரதிகளின் கடுமையான எதிர்ப்பு உள்ளிட்ட சில காரணங்களினால் விமான நிலையத்தில் இருந்து மாகும்புறை பல்முனை போக்குவரத்து மையத்திற்கும் இடையிலான சொகுசுப்பேருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.
சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்
வெளிநாட்டுப் பயணிகளுக்கு வசதியாக
இந்நிலையில் குறித்த சொகுசுப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) லிமிடெட் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்டும் இந்தச் சேவையானது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காலை 5.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
50 நிமிடங்களில் சென்றடையக் கூடிய குறித்த சொகுசுப் பேருந்துப் பயணத்திற்கு 410 ரூபா கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan