இலங்கையில் இன்று கோவிட் மாத்திரமே செயற்பட்டு வருகிறது! அமைச்சர் தகவல் - செய்திகளின் தொகுப்பு (VIDEO)
கோவிட் பெருந்தொற்று காரணமாக இன்று வழமையாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கோவிட் மாத்திரமே செயற்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,