இரத்த வெள்ளத்தில் நாடு மூழ்கியிருக்கும்! பிரதமர் மஹிந்த வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு (VIDEO)
எமது இராணுவத்தை மறந்துவிட்டு, வெளிநாட்டுப் படைகளையும், வெளிநாட்டுத் தலையீடுகளையும் அனுமதித்தால், தற்போதும் எமது நாட்டில் இரத்த வெள்ளமே பாயும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து, இராணுவத்தினர் பெற்றுத் தந்த சுதந்திரத்தை பாதுகாக்க தற்காலத் தலைவர்களும், எதிர்காலத் தலைவர்களும் முன்னிற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், நாட்டுக்காக மிகக் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டு, அவற்றில் வெற்றியடைந்த சந்தர்ப்பங்களால் தான் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
