மலேசியாவில் நடுவானில் ஹெலிகப்டர்கள் மோதி கோர விபத்து
மலேசியாவில் - லுமுட்டில் உள்ள கடற்படை தளத்தில் இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் RMN லுமுட் தளத்தில் இன்று காலை 9.00 மணியளவில் 90வது கடற்படை தின ரோயல் மலேசியன் கடற்படை அணிவகுப்புக்கான ஒத்திகையின் போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஹெலிகப்டர்கள் நடுவானில் மோதியதில் 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அடையாளம் காணும் செயல்முறை
இந்த சம்பவத்தில் அந்நாட்டு கடற்படையின் 7 RMN HOM குழு உறுப்பினர்கள் மற்றும் 3 RMN Fennec குழு உறுப்பினர்கள் அடங்கிய மொத்தம் 10 பணியாளர்கள் பலியாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டு, அடையாளம் காணும் செயல்முறைகளுக்காக Lumut RMN அடிப்படை இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து உலங்கு வானூர்திகளில் ஒன்று, ஏழு பேருடன் ஓடு பாதையில் மோதியதாக நம்பப்படுகிறது. மற்றையது, பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேருடன் அருகிலுள்ள நீச்சல் குளத்தில் மோதி விபத்துக்குள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |