எண்ணெய் கிணறுகளை அழிக்கப்போவதாக டிரம்பின் நேரடி எச்சரிக்கை: 2022இற்கு பின் முதல்முறையாக நடந்த மாற்றம்
மத்திய கிழக்கில் பதற்ற நிலை தொடர்ந்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் அமெரிக்காவின் மசகு எண்ணெய் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலரை கடந்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமான விலையில் காணப்படுகிறது.
ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை
சர்வதேச சந்தைக்கான ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலையும் அதிகரித்து, ஒரு பீப்பாய் 112.78 டொலராகப் பதிவாகியுள்ளது.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகளை அழிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கையே இந்த திடீர் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam