அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து : இரு இளைஞர்கள் பலி
நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
சொரம்பல நோக்கிச்சென்ற லொரியொன்று கட்டுப்பாட்டை இழந்து, தொலைபேசி கம்பம் மற்றும் கல்வெட்டில் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது லொரியின் பின்னால் பயணித்த இரு இளைஞர்கள் வாகனத்தில் நசுங்கி, நாரம்மல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சாரதி கைது
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 26 மற்றும் 29 வயதுடைய வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாரம்மல பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam