லண்டனில் புதிய தொழில்நுட்பத்துடன் சுற்றிவளைப்பில் ஈடுபடும் பொலிஸார்
பிரித்தானியாவில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இலகுவாக கண்டுபிடிக்க Live Facial Recognition எனும் தொழில்நுட்பத்தை பொலிஸார் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது லண்டனில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ள நிலையில், தலைநகரை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் மூலம் பல தேடும் சந்தேக நபர்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை சமிக்ஞை
பொதுமக்களுக்கு ஆபத்தானவர்கள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை இந்தத் தொழில்நுட்பம் நிகழ்நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்து பொலிஸாருக்கு எச்சரிக்கை சமிக்ஞை வழங்கும்.

இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தமிழர்கள் செறிந்து வாழும் Harrow பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பெண்கள் உட்பட பலர் சந்தேக நபர்கள், போதைப்பொருள் பயன்படுத்துவோர், கத்தியுடன் சுற்றித்திரிவோர் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.