இலங்கையில் குழந்தைகளை தத்தெடுத்த லண்டன் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
இலங்கையில் தத்தெடுத்த இரட்டைக் குழந்தைகளை தன்னுடன் இங்கிலாந்து அழைத்துச் செல்வதற்கு லண்டன் தாய் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2013இல் இலங்கைக்கு குடிபெயர்ந்த, லிசா கீர்த்திச்சந்திரா மற்றும் அவரது கணவர் டாஷ் ஆகியோர் இலங்கையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் லாவினியா மற்றும் ஆரியா என்ற குழந்தைகளை 2019 இல் தத்தெடுத்தனர்.
இந்தநிலையில் 44 வயதான வணிக உரிமையாளரான, லிசாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து லண்டனில் சிகிச்சைப் பெறுவதற்காக செல்லவுள்ளதாக லிசா , தம்முடன், தாம் தத்தெடுத்த குழந்தைகள் இருவரையும் அழைத்துச்செல்லவேண்டும் என்று கோரியுள்ளார்
எனினும், காலவரையறையின்றி மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சைப் பெற செல்வதால், குழந்தைகளை விட்டுச் செல்லுமாறு இங்கிலாந்தின் அவசரக்கடவுச் சீட்டு அதிகாரிகள் கூறியதாக கீர்த்திச்சந்திர தெரிவித்துள்ளார்.
இதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ள லிசா, தாம் இல்லாமல் குழந்தைகள் ஒரு நாளும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை லிசாவுக்கு Ehlers Danlos Syndrome (EDS) என்ற பிரச்சினை இருப்பதால், இலங்கையில் அவருக்கு சிகிச்சையளிக்கமுடியாது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே அவர் லண்டனில் சிகிச்சை பெறுவதே மருத்துவர்கள் பாிந்துரைத்துள்ளனர்.
இந்தநிலையிலேயே தமது குழந்தைகளுடன் லண்டன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று லண்டன் தாய், இங்கிலாந்து அரசாங்கத்தை கோரியுள்ளார்.


வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Veera Ep - 332: வள்ளியம்மாவிற்கு எதிராக வீரா எடுக்கும் முடிவு...வில்லதனத்தை ஆரம்பிக்கும் விஜி Manithan
