இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு பூட்டு
கொழும்பில் காணப்படும் இரவு நேர கேளிக்கை விடுதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் இரவு நேர கேளிக்கை விடுதிகள் மூடப்படும் என கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி இதனைத் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இரவு நேர கேளிக்கை விடுதிகள் இயங்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கோவிட் வைரஸ் தொற்று தீவிரமாக பரவக்கூடியது எனவும் மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரவு நேர கேளிக்கை விடுதிகளில் அதிகளவில் கோவிட் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.