மனித உரிமை அலுவலகத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன
கண்டி மனித உரிமை அலுவலகத்தின் இணைப்பு அதிகாரி குமுதினி விதானவை இடமாற்றலுக்கு உள்ளாக்கி அந்தப் பதவிக்கு நிரஞ்சன் டயஸ் சுமணசேகர என்பவரை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி எதேச்சதிகாரமாக நியமித்தமை குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இந்த இடம்மாற்ற உத்தரவிற்கு எதிர்ப்பை வெளியிட்டு உள்ளனர்.
இதனால் மனித உரிமை ஆணைக்குழுவில் பதற்ற நிலை உருவாகி இருந்தது.
நிரஞ்சன் டயஸ் சுமணசேகரவிற்கு கண்டி மனித உரிமை அலுவலகத்தின் இணைப்பு அதிகாரி பதவிக்கான பொறுப்புக்களை ஒப்படைக்க தவறியதாக குற்றம் சுமத்தி குமுதினி விதானவின் பணி இடைநிறுத்தப்பட்டு சம்பளம் நிறுத்தப்பட்டதாக ஆணை குழுவின் செயலாளர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
எனினும் கண்டி காரியாலயத்திலிருந்து கொழும்பு காரியாலயத்திற்கு உரிய நியதிகளை பின்பற்றி இடமாற்றம் செய்யப்படவில்லை என மேல்முறையீட்டு நீதிமன்றில் குமுதினி விதான இடைக்கால தடையுத்தவினை பெற்றுக் கொண்டுள்ளார்.
குமுதினி வித்தானவின் இடமாற்றத்தையும் சம்பள நிறுத்தத்தையும் தற்காலிகமாக அமுல்படுத்த வேண்டாம் என மேல் முறையிட்டு நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் ஆணை குழுவின் செயலாளர் ரஞ்சித் உயன்கொடவின் ஒத்துழைப்புடன் நிரஞ்சன் சுமணசேகர பலவந்தமாக குமுதிலியின் ஆசனத்தில் அமர்ந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரம் கிடையாது
இந்த சம்பவத்தினால் கண்டி மனித உரிமை அலுவலகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதாக ஆணைகுழுவின் ஆணையாளர் பேராசிரியர் விஜித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை ஆணைக் குழுவின் செயலாளர் கடுமையாக எதிர்த்தார் எனவும் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவித்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி ஏனைய உறுப்பினர்களின் பரிந்துரைகளை உதாசீனம் செய்து எதேச்சதிகாரமாக தீர்மானங்களை எடுத்து செயல்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆணை குழுவின் உறுப்பினர்களது இணக்கப்பாடு இன்றி ஆணைக்குழுவின் தலைவியினால் மட்டும் இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த பதற்ற நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த இடத்திற்கு பொலீசார் சென்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மனித உரிமை காரியாலயத்திற்கு வந்திருந்த சிலர் தம்மை தாக்க முயற்சித்தனர் என நிரஞ்சன் டயஸ் சுமணசேகர முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan