புத்தளத்தில் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்போம்! ஹெக்டர் அப்புஹாமி
புத்தளத்தில் உள்ள பன்னிரண்டு உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குறிப்பிட்டுள்ளார்.
விட்டுக் கொடுக்க மாட்டோம்
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 50%க்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துக் கொள்ளட்டும்.
அதில் எங்களுக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் அவ்வாறு பெரும்பான்மை பெறாத ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் உரிமை எதிர்க்கட்சிக்கே உண்டு. அதனை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
புத்தளத்தில் உள்ள பன்னிரண்டு உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களில் விரைவில் நாங்கள் ஆட்சியமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.