பூநகரி பிரதேச சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்பு
பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனு ஏற்கும் பணி இன்று 27.03.2025 நண்பகல் நிறைவடைந்த நிலையில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் மற்றும் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா ஆகியோர் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
ஏழு அரசியல் கட்சியும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஏனைய உள்ளூர் அதிகார சபைகளுக்கு தேர்தல் நடைபெறுகின்ற திகதியான மே மாதம் ஆறாம் திகதியே பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலும் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர்.