உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்சவே (Namal Rajapaksa) வழிநடத்துவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் அமெரிக்கா பறந்த மொட்டுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நாடாளுமன்றத் தேர்தலின்போதுகூட நாடு திரும்பவில்லை.
இதனால் நாடாளுமன்றத் தேர்தலை நாமல் ராஜபக்சவே வழிநடத்தினார். ஓரிரு கூட்டங்களில் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) பங்கேற்றிருந்தார்.
உள்ளூராட்சி தேர்தல்
இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை வழிநடத்த பசில் வரவேண்டும் எனக் கட்சியின் செயற்பட்டாளர்கள் சிலர் கோரி இருந்தாலும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் எண்ணம் இல்லை என்று பசில் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான ஒத்திகை களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் பயன்படுத்தப்படவுள்ளது எனவும் பசில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
