உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவும் தயார்! சமல் ராஜபக்ச அறிவிப்பு
பொதுமக்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிட தானும் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுண கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று தங்காலையில் மகிந்த ராஜபக்சவின் கால்டன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
தேர்தல்
இதன்போது முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.
அங்கு கருத்து வௌியிட்ட அவர், இங்குள்ளவர்களும் பொதுமக்களும் விரும்பினால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் நானும் போட்டியிடத் தயாராக இருக்கின்றேன்.
எல்லா அரசியல்கட்சிகளுக்கும் ஏறுமுகம் போன்றே இறங்குமுகமும் உண்டு.
கடந்த காலத்தில் எங்களது பொதுஜன பெரமுண கட்சி இறங்குமுகத்தை சந்தித்தமை உண்மையானதே.அதில் இருந்து மீண்டு வருவோம் என்றும் சமல் ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
