அம்பாறையில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வாதார உதவிகள்
அம்பாறை (Ampara) மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்தோருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த உதவி வழங்கும் நிகழ்வானது, இன்றையதினம் (14.05.2024) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதமுனை நற்பிட்டிமுனை கல்முனைக்குடி ஆகிய கிராம பிரிவுகளைச் சேர்ந்த 8 பெண் குடும்பங்களுக்கு ரூபா 2 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
வாழ்வாதார உதவிகள்
குறித்த வாழ்வாதார உதவிக்கான காசோலைகள் இனிப்பு பண்டம் தயாரித்தல், கதவு யன்னல் அலங்கார சீலைகள் தயாரித்தல், கருவாடு பதனிடல், தையல் மற்றும் புத்தக பை தயாரித்தல் உள்ளிட்ட வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேச செயல நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் நெறிப்படுத்தலில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தகக்து.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |