நாட்டில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படுமா விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Litro Gas
By Kamal Dec 18, 2025 09:34 AM GMT
Report

இலங்கையில் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை காலமும் இலங்கைக்கு பிரதானமாக சமையல் எரிவாயுவை விநியோகம் செய்த ஓமன் நிறுவனத்திடம் இருந்து வேறு ஒரு நிறுவனத்திற்கு எரிபொருள் விநியோகம் செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படுமா விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Litro Gas Shortage Warning

சுவிட்சர்லாந்தின் ஜியோ கேஸ் என்ற நிறுவனத்திற்கு எரிவாயு விநியோகம் செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையினால் ஜியோ கேஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஓமான் நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்பட்டபோது கடலில் வைத்து இலங்கை தர நிர்ணய சபை குறித்த எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய நிறுவனம் அவ்வாறு தர நிர்ணயங்களுக்கு இணங்க வில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக எவ்வித பிரச்சினையும் இன்றி இலங்கைக்கு எரிவாயு விநியோகம் செய்த ஓமான் நிறுவனத்தை நிறுத்திவிட்டு புதிதாக சுவிஸ் நிறுவனத்திற்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு நான்கு நாட்களுக்கு ஒரு தடவை ஒரு கப்பல் எரிவாயு தேவைப்பாடு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகளுக்கு இணங்காத இந்த நிறுவனத்திற்கு எரிவாயு விநியோகம் செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் மூன்று மாதங்களில் லிட்ரோ எரிவாயவிற்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கமும் சமையல் எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினையால் கவிழ்ந்தது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .

அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டால் எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதம் அளவில் நாட்டில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US