IMFஇன் அனுமதி கிடைக்கவிட்டால் பேரிடி - எரிபொருள் விலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்..!
சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைக்காவிட்டால், தற்போது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள மானியத் தொகை நேரடியாக எரிபொருள் விலையுடன் சேர்க்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
டீசல் மற்றும் பெட்ரோலுக்கு தற்போது நடைமுறையிலுள்ள மானிய முறைமையின் கீழ், ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயையும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாயையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலையேற்றத்திலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு சுமார் 20 பில்லியன் ரூபாயை செலவிட்டு வருகிறது.
எரிபொருள் இறக்குமதிக்கான முழுச் செலவையும் அரசாங்கம் ஏற்க நேரிட்டால், அது ஆண்டுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக செலவை ஏற்படுத்தும்.
தீர்மானம்
இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை உருவாக்கும். எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வரை இந்த மானிய முறையைத் தொடர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மே மாதத்திற்குப் பிறகும் இதனை நீடிப்பதா என்பது குறித்து, மத்திய கிழக்கில் நிலவும் சூழல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி நிலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

ஒருவேளை சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைக்காவிட்டால், தற்போது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள மானியத் தொகை நேரடியாக எரிபொருள் விலையுடன் சேர்க்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள மானியத் தொகை நேரடியாக எரிபொருள் விலையுடன் இணைக்கப்படுவதால் மீண்டும் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிக்கலாமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam