நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: பிறப்பிக்கப்பட்டது உத்தரவு
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகளிலும் மது விற்பனையைத் தடுக்கும் உத்தரவை கலால் திணைக்களம் பிறப்பித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03.10.2023) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் நாளைய தினம் சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
