இலங்கையை மேற்கோள்காட்டி டுவிட்டரில் பதிவிட்ட மலேசிய அரசியல்வாதி:விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்
மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்தமைக்காக சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக மலேசிய ஜனநாயக செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
தான் எவரையும், எந்த வகுப்பையும் அல்லது நபர்களின் சமூகத்தையும் தூண்ட விரும்பவில்லை எனவும் அவர் நேற்று கூறியுள்ளார்.
I am prepared to go to jail for warning Malaysia not to become another Sri Lanka but is Najib prepared to go to jail for Malaysia’s infamy, ignominy or iniquity worldwide as “kleptocracy at its worst”? https://t.co/Vv9LSp6N18 pic.twitter.com/Z2t7OOrYmj
— Lim Kit Siang (@limkitsiang) May 21, 2022
மற்றொரு நபரை எரிச்சலூட்டும், துஷ்பிரயோகம் செய்யும், அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் நோக்கத்துடன் ஆபாசமான, அநாகரீகமான, பொய்யான, அச்சுறுத்தும் அல்லது புண்படுத்தும் தன்மை கொண்ட எந்தவொரு தூண்டுதலை நான் உருவாக்கவில்லை அல்லது ஆரம்பிக்கவில்லை.
எனினும் மலேசியர்களை எச்சரித்தமைக்காக நான் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன். மலேசியா மற்றுமொரு இலங்கையாக மாறக் கூடாது எனவும் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் விளைவிக்கும் கருத்தை கொண்டிருந்ததாகக் கூறப்படும் லிம் கிட் சியாங்கின் டுவிட் தொடர்பாக மலேசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் லிம் இந்த கருததுக்களை வெளியிட்டுள்ளார்.
"கடந்த வாரம் இலங்கையில் நடந்தது போல் மலேசியாவின் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் கோபமடைந்த போராட்டக்காரர்களால் தீவைக்கப்படுமா?" என லிம் டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
இது தொடர்பாகவே மலேசிய பொலிஸார் அவருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லிம் கிட் சியாங்கின் டுவிட்டர் பதிவு கடந்த வியாழன் முதல் வாட்ஸ்அப்பில் வைரலாக பகிரப்பட்டு வருவதாக கோலாலம்பூர் புக்கிட் அமான் பொலிஸ் தலையைமகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக அந்நாட்டிலும் மக்கள பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கோவிட் 19 தொற்று நோய் பரவல் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்கள் காரணமாக மலேசியாவில் இந்த நிலைமை உருவாகி இருப்பதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan

இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவரா? கோலியை போலவே ரோகித்துக்கும் ஆப்பு அடிக்கப்போகும் பிசிசிஐ! Manithan
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022